போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்க கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: வி சி க தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்ேச  வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபய  ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவரை 29ம் தேதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப் பெறவேண்டும்.2009ம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதன்மையான காரணம் அன்றைய ராணுவ ஆலோசகராக இருந்த கோத்தபய ராஜபக்ேச தான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி  என அவர் மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்.   தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபய ராஜபக்சவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு  திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23ம் தேதி ஆர்ப்பாட்டம்  நடைபெறும். 

Related Stories:

>