×

கொல்லன் வயல் சாலையோரம் அமர்ந்து மது அருந்த கூடாது என்ற எச்சரிக்கையை மீறும் குடிமகன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே சாலை ஓரம் அமர்ந்து மது அருந்தக்கூடாது என வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, குடிமகன்கள் மது அருந்துவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் கொல்லன் வயல் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லன்வயல், சிலட்டூர், தாந்தாணி போன்ற ஊர்களுக்கு சென்று வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மெயின் ரோட்டில் இருந்து சுமார் 2கி.மீ தூரத்திலேயே வீடுகள் உள்ளது. அறந்தாங்கி நகரில் இருந்து சில கி.மீ தூரத்தில் உள்ளதாலும், மெயின் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலை என்பதாலும், அந்த சாலையில் 2 கி.மீ தூரத்தை கடந்தே வீடுகள் உள்ளதாலும், மதுபான பிரியர்கள் மதுபானங்களை வாங்கி வந்து, சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பெரும்பாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த சாலையில் ஏராளமானவர்கள் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து மது அருந்தி வந்தனர். இவ்வாறு மதுப்பிரியர்கள் சாலையில் அமர்ந்து மது அருந்தியதால், அந்த சாலை வழியாக செல்வோர் குறிப்பாக பெண்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்த சாலையில் அமர்ந்து மது அருந்தக்கூடாது என காவல்துறையின் பெயரால் கொல்லன்வயல் சாலையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதால், சாலை ஓரம் அமர்ந்து மதுபானம் அருந்தியவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது கொல்லன்வயல் சாலையில் அமர்ந்து மது அருந்துபவரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே கொல்லன்வயல் சாலையில் செல்லும் பொதுமக்கள், மாணவியர் நிலையை கருத்தில் கொண்டு, அந்த சாலையில் மது அருந்துபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து, கொல்லன்வயல் சாலையில் மதுப்பிரியர்கள் மது அருந்தாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவியர் கோரிக்கை விடுத்துள்னர்.


Tags : Citizens ,sidewalk ,Collin Field , Collision, alcohol, warning, action
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு