×

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி : சர்வதேச திரைப்பட விழாவில் “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி“ விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

பனாஜி : கோவாவில் நடைபெறும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி“ விருது வழங்கப்பட்டது.மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து ரஜினிக்கு விருதை வழங்கினர்.

 50வது சர்வதேச திரைப்பட விழா

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில் சர்வதேசம், இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் 3 இடங்களில் திரையிடப்படுகின்றன. ஈரான், கொரியா, பிரான்ஸ் உட்பட 76 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களும், இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சேர்ந்த 41 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. இப்பிரிவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 2 தமிழ்த் திரைப்படங்களும் தேர்வாகியுள்ளன.

 ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி“ விருது


இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர். இந்த விழாவில், சிறப்பு தபால் தலை வெளியீடபட்டது. பின்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி“ விருது வழங்கப்பட்டது.மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து ரஜினிக்கு விருதை வழங்கினர்.

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி


இதையடுத்து விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என கூறினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த பேசியதாவது,தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன்.மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர், கோவா முதல்வர்,எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சனுக்கு நன்றி.‘ICON OF GOLDEN JUBILEE  விருது பெற்றதில் மகிழ்ச்சி. எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி. என்றார்.


Tags : Rajinikanth ,Tamil ,speech ,International Film Festival ,actor , Goa, Prakash Javadekar, Amitabh Bachchan, International Film Festival, Icon of Golden Jubilee, Rajinikanth, Award
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...