×

உலகின் பல்வேறு நாடுகளில் சமூக வலைதளங்கள் முடங்கின

புதுடெல்லி: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், மெசஞ்சர் ஆகியவற்றை பயன்படுத்துவதில் உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று சிக்கல் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. ஆன்லைன் செயலிழப்புகளை கண்காணிக்கும் டவுன் டெக்கர் வலைதள அறிக்கையில், உலகின் பல பகுதிகளில் பேஸ்புக் நெட்வொர்க் சேவைகளில் இடையூறு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 63 சதவீதத்தினர் முற்றிலும் முடங்கியதாகவும், 19 சதவீதம் பேர் உள்நுழைவதில் சிக்கல் இருந்ததாகவும் 16 சதவீதத்தினர் செய்திகளை பதிவிடுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து, ஐரோப்பாவின் சில பகுதிகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முற்றிலுமாக செயலிழந்தது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை 14 மணி நேரத்துக்கும் மேலாக செயலிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : world ,countries , Social networking
× RELATED இணையவழிக் குற்றங்கள் அதிகம்...