×

வேப்பேரியில் 26.51 கோடியில் வணிகவரி அலுவலக கட்டிடம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: சென்னை - வேப்பேரியில், சென்னை (வடக்கு) வணிகவரி கோட்டத்திற்குட்பட்ட இணை ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட 32 வணிகவரி அலுவலகங்களுடன் ₹26 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வடசென்னை ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம், திருவள்ளுர் மாவட்டம் நசரத்பேட்டையில், சென்னை (தெற்கு) வணிகவரி கோட்டத்திற்குட்பட்ட, துணை ஆணையர் (வணிகவரி) சரகம் - II அலுவலகம் மற்றும் நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட 16 வணிகவரி அலுவலகங்களுடன் கட்டிடம், நாமக்கல் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடம் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அலுவலக கட்டிடம் ஆகியவைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்,  அமைச்சர் ஜெயக்குமார், கே.சி.வீரமணி, தலைமை செயலாளர் சண்முகம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன், வணிகவரி ஆணையர் டி.வி.சோமநாதன், பதிவு துறை தலைவர் ஜோதிநிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Merchant Office Building ,Edappadi ,Vepery , Merchant Office Building, Chief Minister Edappadi
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்