×

சியாச்சினில் நடந்த பனிச்சரிவில் இறந்த வீரர்களுக்கு இரங்கல்

புதுடெல்லி: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி இறந்த 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேருக்கும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் வடக்கே உள்ள கரக்கோரம் பகுதியில் 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் பனிமலை அமைந்துள்ளது. இங்கு ராணுவ முகாம் அமைக்கப்பட்டு, இந்திய வீரர்கள் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள ராணுவ பகுதி இதுவாகும். நேற்று முன்தினம் சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 வீரர்களும், 2 பொதுமக்களும் பலியாகினர். இவர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘சியாச்சினில் உயிரிழந்த வீரர்களின் சேவைக்காக வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.


Tags : soldiers ,Siachen ,veterans , Ciyaccini, Avalanche, mourned
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை