டெல்லியில் நிலநடுக்கம்

புதுடெல்லி: நேபாளத்தை தொடர்ந்து டெல்லி, லக்னோ மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தை மையம் கொண்ட இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நேபாள நாட்டின் தைலெக் மாவட்டத்தின் வடமேற்கில் 87 கி.மீ. தொலைவில் 14 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு நேற்று இரவு 7.30 மணியவளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி, லக்னோவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதனால், எவ்வித உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, அண்டை நாடான நேபாளத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.Tags : Earthquake ,Delhi , Earthquake,Delhi
× RELATED துருக்கியில் பூகம்பம்; 22 பேர் பலி: 1000 பேர் காயம்