மம்தா பேச்சுக்கு ஓவைசி பதிலடி

கொல்கத்தா: தன் மீதும், தனது கட்சியின் மீதும் குற்றம்சாட்டி பேசிய மம்தாவுக்கு ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் உள்ள கூக் பெஹார் மக்களவை தொகுதியை திரிணாமுல் காங்கிரசிடம் இருந்து சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ கைப்பற்றியது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியை முஸ்லிம்கள் ஆதரவுடன் பாஜ கைப்பற்றியுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி ேநற்று முன்தினம் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டி பேசினார். அப்போது அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்ஹாடு உல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாசுதின் ஓவைசியை தாக்கும் வகையில் பேசிய மம்தா  `இந்து தீவிரவாதம் போல் மேற்குவங்கத்தில் சில சிறுபான்மையினர் உள்ளிட்ட தீவிரவாதிகள் உள்ளனர்.

அவர்கள் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றனர். பாஜ.விடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர் என குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ஓவைசி நேற்று பதிலடி தந்தார். செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘என் மீது மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இது, மேற்கு வங்கத்தில் எங்கள் கட்சி வலுவடைந்து வருவதை காட்டுகிறது,’’ என்றார்.

Related Stories:

>