நாராயணசாமி தாக்கு ஹிட்லரின் தங்கை கிரண்பேடி

புதுச்சேரி:  மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரி அதிகாரிகளை நினைத்து நான் பரிதாபப்படுகின்றேன். அவர்களிடம் பேசும்போது எனக்கு அவர்களின் நிலை தெரிகிறது. அதிகாரிகளை வசைபாடுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் கவர்னர் கிரண்பேடி ஈடுபடுகின்றார்.

மாநில மக்களையும், வளர்ச்சியையும் கவலைப்படாமல் தர்பார் நடத்துகின்றார். அமைச்சரவையை அவர் மதிப்பதே கிடையாது. விரைவில் இதற்கு நீதிமன்றம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். விரைவில் சிலர் சிறைக்கு செல்வார்கள். அரசு அதிகாரிகள் சிலர் கணக்கு தீர்க்கப்படுவர். நாங்கள் அனுமதி வாங்கிதான் சிங்கப்பூர் சென்றோம். தேவையில்லாத வேலையில் ஏன் தலையிடுகிறீர்கள்.  புதுச்சேரி மக்களை எவ்வளவு துன்புறுத்த வேண்டுமோ அவ்வளவு துன்புறுத்தும் செயலில் கவர்னர் ஈடுபடுகிறார். ஹிட்லரின் தங்கையாக செயல்படுகிறார் கிரண்பேடி. நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>