×

இளம் அறிவியலாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு இளம் அறிவியலாளர்களுக்கான விருதுக்கு டிசம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அறிவியலாளர்களுக்கு தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது, தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது ஆகியவற்றை கடந்த 2000ம் ஆண்டு முதல் அறிவியல் நகரம் வழங்கி வருகிறது. இதையடுத்து, 2018ம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது வழங்கப்பட உள்ளன.

 அதற்கான விண்ணப்பங்கள், அடிப்படை தகுதிகள், விதிகள் குறித்த விவரங்கள் அனைத்தும் www.sciencecitychennai.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிவியல் விருதுகள் பெற விரும்புவோர் மேற்கண்ட இணைய தளத்தில் இருந்து விவரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் டிசம்பர் 20ம் தேதிக்குள் சென்னை அறிவியல் நகரத்துக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை தபால் அல்லது நேரில் அளிக்க வேண்டும்.


Tags : scholars ,Young Scientist , Young Scientist,apply , award
× RELATED அண்ணல் அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க 25ம் தேதி கடைசி நாள்