×

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக உயர்கல்வித்துறை சார்பாக அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு பாடப்பிரிவின் கீழ் இயங்கி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கக் கூடிய பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலை. கவனித்து வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலை. இரண்டாக பிரித்து ஒன்று ஆய்வு பல்கலை. யாக மாற்றுவதற்கான முயற்சியாக அது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு பல்கலைக்கழகமாக மாற்றப்படும் போது அங்கு இருக்கக்கூடிய பாடப்பிரிவுகள் சார்ந்த உயர் ஆய்வுகள் செய்வதற்கான வழிவகை செய்யும். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இந்தியாவில் இருக்கக்கூடிய ஆய்வு மாணவர்கள் அண்ணா பல்கலை. வந்து பொறியியல் படிப்புகள், பல்வேறு பாடப்பிரிவுகள் சார்ந்த உயர் ஆய்வுகளை மேற்கொள்ள அது வழிவகை செய்யக்கூடியதாக அமையும் என்பதன் அடிப்படையில் அண்ணா பல்கலை. இரண்டாக பிரிப்பதாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கு பின்பு அதற்கான அரசாணை வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அண்ணா பல்கலை. மேம்படுத்துவது தொடர்பாகவும், மேலும் ஐஐடியை போன்று ஒரு உயர் பல்கலை. கழகமாக மாற்றுவதற்கான ஒரு நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் அண்ணா பல்கலை. சென்றுவிடுமோ என்ற அச்சம் நிலவிய நிலையில் தற்போது தமிழக அரசே ஒரு ஆய்வு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியை ஆலோசித்து வந்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் இது ஆலோசிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் இரண்டாக பிரித்து ஒரு ஆராய்ச்சிக்கான தனி பல்கலைக்கழகமாகவும், அண்ணா பல்கலை. விரைவில் உருவாக்க உள்ளது.


Tags : Tamil Nadu ,Cabinet ,Anna University , Anna University, Tamil Nadu Cabinet,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...