×

அதிகாரிகளை மிரட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்: ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை...புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: அதிகாரிகளை தினந்தோறும் வசைபாடும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான   இந்திராகாந்தி, இந்தியாவின் இரும்பு பெண்மணி என போற்றப்படுகிறார். லால் பகதூர் சாஸ்திரி கடந்த 1966-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் இந்திரா நாட்டின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார். 1966 முதல் 1977 வரை மற்றும் 1980 முதல்   1984 ல் இறக்கும் வரை பிரதம மந்திரி பதவியில் இருந்தார். 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறந்த இந்திரா காந்தி, கடந்த 1984-ம் ஆண்டு  அக்டோபர் 31-ம் தேதியன்று, அவரது பாதுகாவலர்களாக இருந்த இரண்டு சீக்கியர்களால் சுட்டுக்  கொல்லப்பட்டார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102- வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராணயசாமி, எந்தவித அதிகாரங்களும் இல்லாமல் அதிகாரிகளை மிரட்டுவது போன்ற  செயல்களில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், மாநில மக்களையும், வளர்ச்சியையும் பற்றி கவலைப்படாமல் கிரண்பேடி, தர்பார் நடத்திவருவதாக அவர் குற்றம்சாட்டினார்.


Tags : Narayanaswamy ,brother ,Pranicherry ,Hitler ,Narayanasamy ,Puducherry , Puducherry Chief Minister Narayanasamy alleges Hitler's brother
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...