×

பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு பணி சுணக்கம் தெருக்களில் குப்பை குவியல்: நோய் பாதிப்பில் பொதுமக்கள்

தாம்பரம்: பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேட்டில் மக்கள் தவித்து வருகின்றனர்.பல்லாவரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் துப்புரவு ஊழியர்கள் முறையாக குப்பையை அகற்றுவது இல்லை. குறிப்பாக, திருமலை நகர் பிரதானசாலை, குரோம்பேட்டை,  அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ராதா நகர் மற்றும் அதன் சுற்றுவட்ட  பகுதிகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் தினசரி குப்பை அகற்றப்படாததால், மலைபோல் குப்பை  குவிந்துள்ளது. மருத்துவமனை, பள்ளி, குடியிருப்பு பகுதியிலும் தொட்டிகள் நிரம்பி சாலை முழுவதும் குப்பை பரவி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் குப்பை கழிவுகளை குப்பை தொட்டியின் அருகில் உள்ள காலி இடங்களில் கொட்டிவிட்டு செல்லும் நிலை  உள்ளது.  

நாள் கணக்கில் தேங்கும் குப்பையால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பை கழிவுகளை தினமும் அகற்ற வேண்டும்  என பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, குவிந்துள்ள குப்பை கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாள் கணக்கில் தேங்கும் குப்பையால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.



Tags : municipality ,streets ,Pallavaram ,public , Cleanup work , Pallavaram, municipality, risk ,disease
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு