×

திருச்சியில் பெண் போலீஸ் உடல் தகுதி தேர்வு: கர்ப்பிணிகள் 5 பேர் நிராகரிப்பு; சரியாக உயரம் அளக்காத அதிகாரிக்கு டிஐஜி கண்டிப்பு

திருச்சி: திருச்சியில் இன்று இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று துவங்கியது. தேர்வுக்கு வந்த 5 கர்ப்பிணிகள் நிராகரிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்கள், தீயணைப்புத்துறை பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கு நடத்தப்பட்ட 3 நாட்கள் தேர்வில் மொத்தம் 1,705 பேர் தேர்வாகினர். பெண்களுக்கான காவலர் தேர்வு 9ம் தேதி நடக்க இருந்தது.பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அந்த தேர்வு இன்று திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று துவங்கியது. 700 பெண்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 634பேர் கலந்துகொண்டனர். திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், பெரம்பலூர் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாநகர கமிஷனர் அமல்ராஜூம் தேர்வை பார்வையிட்டார். தேர்வுக்கு 5 கர்ப்பிணிகள் வந்திருந்தனர்.அவர்களிடம் விசாரித்த அதிகாரிகள் அவர்கள் தேர்வுக்கு தகுதியற்றவர்கள் என நிராகரித்தனர். உயரம் சரிபார்க்கப்பட்ட நிலையில் தங்களை ஓட்டத்தில் அனுமதிக்கும்படி கர்ப்பிணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். திருவானைக்காவலை சேர்ந்த ஒரு பெண் கைக்குழந்தையுடன் தேர்வுக்கு வந்திருந்தார்.

உயரம் அளப்பதில் தில்லுமுல்லு?
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த திவ்யா என்பவரும் தேர்வில் கலந்துகொண்டார். அவருக்கு உயரம் அளந்தபோது, குறைவாக இருந்தாக நிராகரிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து டிஐஜி முன்னிலையில் எலக்ட்ரானிக் மெஷினில் உயரம் சரிபார்க்கப்பட்டது. அப்போது உயரம் சரியாக இருந்தது. இதையடுத்து மீண்டும் பழையமுறைபடி உயரம் சரிபார்க்கப்பட்டபோதும் உயரம் சரியாக இருந்ததால் அவர் மீண்டும் தேர்வில் அனுமதிக்கப்பட்டார். சரியாக உயரம் அளக்காத போலீசாரை டிஐஜி கண்டித்தார்.

Tags : officer ,Trichy ,Women ,DIG , Trichy, Female Police, Physical Examination
× RELATED வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்...