டோனி சொன்ன அந்த ஒரு வார்த்தையால்தான் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் என்னுடைய சதம் பறிபோனது: கவுதம் கம்பிர்

டெல்லி: எம்.எஸ். டோனி சொன்ன அந்த ஒரு வார்த்தையால்தான் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் என்னுடைய சதம் பறிபோனது என்று கவுதம் காம்பீர் நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேவாக்,  தெண்டுல்கர் ஏமாற்றம் அளித்த நிலையில் கவுதம் காம்பிர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 122 பந்தில் 97 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்ததார். இதுகுறித்து அவர் கூறியதாவது;

2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஏன் சதத்தைத் தவறவிட்டோம் என்ற இந்த கேள்வியை எனக்குள் நான் பலமுறை கேட்டிருக்கிறேன். 97 ரன்கள் சேர்த்திருந்தபோது எனக்கு என்ன நடந்தது, ஏன் ஆட்டமிழந்தேன் எனக் கேட்டுள்ளேன். நான் பலரிடமும் கூறியது என்னவென்றால், நான் 97 ரன்கள் அடித்தேன் என்ற விவரமே அப்போது களத்தில் இருந்த எனக்குத் தெரியாது. எனக்கு என்னுடைய தனிப்பட்ட ஸ்கோர் என்ன என யாரும் சொல்லவில்லை அதுபற்றி நினைக்கவும் இல்லை. என்னுடைய நோக்கம், இலக்கு அனைத்தும் இலங்கையை வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. ஓவர் முடிந்த நிலையில், நானும், கேப்டன் தோனியும் பேசிக்கொண்டோம். அப்போது, தோனி என்னிடம் நீங்கள் இப்போது 97 ரன்கள் அடித்திருக்கிறீர்கள். சதம் அடிக்க இன்னும் 3 ரன்கள்தான் இருக்கிறது. 3 ரன்கள் அடித்தால் சதத்தை எட்டிவிடலாம் என்றார். கேப்டன் தோனியிடம் இருந்து இந்த வார்த்தை வரும்முன்பு வரை எனக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. என் தனிப்பட்ட ஸ்கோரைப் பற்றி சந்திக்கவில்லை. ஆனால், தோனி கூறியபின்புதான் என்னுடைய தனிப்பட்ட ஸ்கோரைச் சிந்திக்கத் தொடங்கினேன்.

உடனே என்னுடைய மனது, மூளை என்னுடைய தனிப்பட்ட ஸ்கோரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது, ரத்தத்தில் ஒரு வேகம் ஏற்பட்டு அதைப் பற்றிய ஓட்டம் என் மனதில் ஓடியது. தோனி என்னிடம் சொல்வதற்கு முன்புவரை, இலங்கையை வெல்ல வேண்டும் என்ற இலக்கு மட்டுமே என் கண் முன் இருந்தது. ஆனால் தோனி கூறியபின் எல்லாமே மாறிவிட்டது.  நான் சதம் அடிப்பதை தோனி நினைவுபடுத்தாமல் இருந்திருந்திருந்தால் நான் ஆட்டமிழக்காமல் இருந்திருப்பேன் என்று எம்.எஸ்.தோனி மீது 8 ஆண்டுகளுக்குப்பின் கவுதம் கம்பீர் மறைமுகமாக பழிசுமத்தியுள்ளார்.

Related Stories:

>