×

10 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகள் உட்பட 10 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பல்லாவரம் குளத்துமேடு, வேம்புலியம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்த ஷைன்ஷாலி (24), தூத்துக்குடி மாவட்டம் நாலட்டினபுதூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (24), பல்லாவரம் திரு.வி.க. தெருவை சேர்ந்த பிரேம்குமார் (24), கஞ்சா விற்பனை செய்து வந்த கண்ணகி நகரை சேர்ந்த மஞ்சுளா (42), விக்டர் (38), காமராஜ் (எ) ராமராஜ் (30), ெகாலை வழக்கில் தொடர்புடைய குன்றத்தூர் காலடிப்பேட்டை காந்தி தெருவை சேர்ந்த கோட்டீஸ்வரன் (28), மோகன் (27), கிருஷ்ணகுமார் (44) மற்றும் பாலியல் வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு நரசிம்மா நகர் 4வது தெருவை சேர்ந்த மகேந்திரா (எ) மகேஷ் (23) ஆகிய 10 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags : Madras , Madras, for 10, Kundas
× RELATED சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 18 பேர் உயிரிழப்பு