மூதாட்டியிடம் நகை பறிப்பு

பெரம்பூர்: கொளத்தூர் கம்பர் நகர்  வால்மீகி தெருவை சேர்ந்த தெரேசா ஆண்டனி (83), நேற்று காலை கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 24வது தெரு வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், மூதாட்டியை மறித்து, அவர் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து பெரவள்ளூர்  குற்றப்பிரிவில் மூதாட்டி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று,  குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories:

>