அண்ணன் பேட்டி கட்சி பற்றி ரஜினி விரைவில் அறிவிப்பார்

தர்மபுரி: ரஜினியின் 70வது பிறந்த நாளையொட்டி, அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் சிறப்பு யாகம் நேற்று நடந்தது. இதில் குடும்பத்துடன் பங்கேற்ற ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கூறுகையில், தமிழகத்தில் உள்ள  அரசியல் வெற்றிடம் பற்றி, ரஜினியே  சொல்லியிருக்கிறார். ரஜினி எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதர். மக்களுக்கு பிரச்னை என்றால், நேரடியாக சென்று மக்களை சந்திப்பார். ரஜினியால் தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொண்டு வர முடியும்.  அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து விரைவில் அறிவிப்பார் என்றார்.


Tags : Rajini ,party ,Brother interview , Brother , Rajini ,party soon
× RELATED ரஜினி படத்தை கிழித்து வீசி ோராட்டம்