×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் 6,043 கனஅடியாக நீடித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 5 ஆயிரம்  கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும், நீர் திறப்பு குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சி.

Tags : Mettur Dam Mettur Dam , Water ,shortage , Mettur Dam
× RELATED முசிறி நகர மக்களின் குடிநீர்...