பொதுவாக விளையாட்டு என்பது ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் தருவது தான் விளையாட்டு. உடல் ஆரோத்தியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் உகந்தது தான் விளையாட்டு. அந்த விளையாட்டில் விவாதத்தை தவிர்த்து போட்டி மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது ஆரோக்கியமானதாக இருக்கும். பல ஆண்டாக பாரம்பரியமாக பல விளையாட்டுகள் நம்மிடம் தான் ஆரம்பித்தன. பல விளையாட்டுகளும் ஆரோக்கியத்துக்கும், தனி மனித பக்குவத்தையும் வளர்த்தன என்றால் மிகையல்ல. ஆனால், இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் இருக்கக்கூடிய முன்னேற்றம் வரவேற்க கூடியது தான். ஆன்லைன் விஷயங்களை எடுத்து கொண்டால் பல நல்ல அம்சங்கள் உள்ளன. நமக்கு பல வகையில் உதவுகின்றன. மனித இனத்திற்குரிய வளர்ச்சிக்கான நவீன கல்வியாக பயன்படுத்த வேண்டுமே தவிர அதிலேயே நாம் நம்மை இழந்து விடுகிற சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. இந்த வகையில் தான் சமீப காலமாக ப்ளே கேம்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன. பப்ஜி, புளூவேல் போன்ற விளையாட்டுகள் வெளிநாடுகளில் தான் முன்பு அதிகமாக விளையாடப்பட்டது. தற்போது சில மாதங்களாக அந்த விளையாட்டு தமிழகத்திலும் சிறுவர்களிடையே பரபரப்பாக விளையாடப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் பெற்றோர்களை தேடுகிறார்களோ இல்லையோ, செல்போன் எங்கிருக்கிறது என்று தான் தேடுகின்றனர். இதில் பெற்றோர்களும் கவனம் செலுத்துவதில்லை. தாங்கள் வேலை செய்வதற்கு தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று சும்மா இருந்து விடுகின்றனர். இதனால், குழந்தைகள், சிறுவர்கள் கேம்களில் மூழ்கிவிடுகின்றனர். விபரீதம் ஆன பிறகே பெற்றோர் உணர்கின்றனர். அதற்குள் காலம் கடந்து விடு்கிறது.
ஒரு விளையாட்டை நாம் தான் ஆட்கொள்ள வேண்டும், அது நம்மை ஆட்கொள்ளக்கூடாது. அந்த அடிப்படையில் தான் அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறது.
இந்த மாதிரியான விளையாட்டுகள் கிராமப்புறங்களை விட நகரங்களில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் அதிகமாக விளையாடப்படுகிறது. அவர்கள் தான் வெளியில் மைதானங்களில் விளையாட செல்லாமல் வீட்டிற்குள் இருப்பதால் இது போன்ற விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். குழந்கைள் என்ன கேம் விளையாடுகின்றனர், அவர்கள் பள்ளி செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் என்ன செய்கின்றனர் என்பதை பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகள் மீது தொடர் கவனிப்பில் வைத்து இருக்க வேண்டும். அவர்களை வீட்டில் இருக்கும் ேபாது கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். மதி மயக்கும் கேம்களாக இருப்பின், அது வேண்டாம் என பெற்றோர்கள் அறிவுரை வழங்க வேண்டும். விளையாட்டில் உள்ள நன்மை செய்திகளை எடுத்துக்கூற வேண்டும். சில விளையாட்டு ேகம்களில் உள்ள தீமைகளையும் அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். அவர்களின் அறிவுக்கு வராத வகையில் அதை ஒரு கடமையாக பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். நகரங்களில் வசிக்கும் குழந்தைகள் செல்போன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இ்ப்போது புதிதாக அவ்வப்போது ஆன்லைன் அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளன. வியைாட்டுகளிலும் பல வகைகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் நன்மை எது, தீமை எது என்று பெற்றோர் தான் உணர வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டு கேம்களினால் பிரச்னை இருந்தால், விபரீதமான கேம்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டால், அதை தடை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அரசு உஷாராக கண்காணிப்புடன் உள்ளது.பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் பெற்றோர்களை தேடுகிறார்களோ இல்லையோ, அவர்களுடைய மொபைல் போன் தான் எங்கிருக்கிறது என்று தேடுகின்றனர்.
