கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு

தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் ரெட்டமலை சீனிவாசன் நகரை சேர்ந்த நிவேதா (22), மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்ததும், மாநகர பேருந்து (த.எ: 159) மூலம் திருவொற்றியூர் புறப்பட்டார். வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே பேருந்து நின்றபோது, அதில் ஏறிய 2 மர்ம நபர்கள், நிவேதா கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினர்.

அதிர்ச்சியடைந்த நிவேதா திருடன், திருடன் என கூச்சலிட்டார்.  உடனே பஸ் நிறுத்தப்பட்டு சக பயணிகள் அவர்களை விரட்டினர். ஆனால், அதற்குள் அவர்கள் தப்பினர். இதுகுறித்து நிவேதா அளித்த புகாரின்பேரில் தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, மாணவியிடம் செல்போன் பறித்த 2 மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Tags : college student , Thandayarpet, college student, cell phone, flush
× RELATED செல்போனில் அழைத்து கேட்டால் ஆன்லைன்...