×

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் சிக்கியது: 3.5 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்

பல்லாவரம்: பல்லாவரத்தில உள்ள தனியார் கல்லூரி அருகே, ஒரு கும்பல், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக, பல்லாவரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்தில் ரகசியாக கண்காணித்தனர். அப்போது, ஒரு இடத்திற்கு மாணவர்கள் அதிகளவில் வந்து செல்வது தெரிந்தது. அங்கு சென்றபோது, 5 பேர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பது தெரிந்தது. அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில், எண்ணூர் சத்யவாணி முத்து நகர் 4வது தெருவை சேர்ந்த காளிதாஸ் (37), எண்ணூர் எர்ணாவூர் கேட் 2வது தெருவை சேர்ந்த அரவிந்தன் (26), மேற்கு தாம்பரம் காந்தி சாலையை சேர்ந்த லோகேஷ் (23), எண்ணூர் எர்ணாவூர் கேட் 2வது தெருவை சேர்ந்த பரத்குமார் (24)  மற்றும் தாம்பரம் கைலாசபுரம் லோகநாதன் தெரு 3வது தெருவை சேர்ந்த அபினேஷ் (24) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


46 பேர் சிக்கினர்
கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் நடத்திய சோதனையில், தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த
37 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை  போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34.75 கிலோ கஞ்சா மற்றும் 85,610, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 9 பைக்குகள், 3ஆட்டோக்கள், 5 செல்பேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : gang , students, cannabis sold, gang, stuck
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....