×

கணக்கீட்டு ஆய்வுப்பணி அதிகாரிகளுக்கு படி உயர்வு: மின்வாரியம் நடவடிக்கை

சென்னை: கணக்கீட்டு ஆய்வுப்பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு படியை உயர்த்தி மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வாரியத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கணக்கீட்டு ஆய்வுப்பணி நடத்தப்படும். அப்போது மின்விநியோகம் செய்ததற்காக பெறப்பட்ட கட்டணம், சாதனங்கள் கொள்முதல்  உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும்.

அப்போது அதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் சரிசெய்யப்படும். இப்பணியில் ஈடுபடும் துணை தலைமை உள் தணிக்கை அதிகாரிக்கு மாதம் 450 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் உள் தணிக்கை அதிகாரிக்கு 330, உதவி தணிக்கை  அதிகாரிக்கு 280, தணிக்கையாளர்கள் 230 படியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது இப்படியானது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி துணை தலைமை உள் தணிக்கை அதிகாரிக்கு மாதம் 900, உள் தணிக்கை அதிகாரிக்கு 660, உதவி தணிக்கை அதிகாரிக்கு 560, தணிக்கையாளர்கள் 460 என வழங்கப்படும். இவ்வாறு  அவர் கூறினார்.

Tags : Computational Survey Officers ,The Power of Action , Computational, Survey , Power, Action
× RELATED கேங்மேன் பணி தேர்வு தேதிகளில் மாற்றம்: மின்வாரியம் நடவடிக்கை