×

பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறு நிர்ணயம் செய்ய குழு: தொழிலாளர் நலத்துறை உத்தரவு

சென்னை: பட்டாசு தொழிலாளர்களுக்கான  குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்ய குழு அமைத்து தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு 1948ம் ஆண்டு இயற்றிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி பல்வேறு தொழில்களுக்கு காலத்திற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த தொழில்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்த  ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2018-2019ம் ஆண்டில் 25 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 தொழில்களுக்கு மறுநிர்ணயம் செய்யும் பொருட்டு முதல்நிலை அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டாசு சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்து தொடர்பான குழுவை அமைத்து  தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை  வெளியிட்டுள்ளது. இதன்படி மதுரை மண்டல தொழிலாளர் துறை இணை ஆணையர் தலைவராகவும், விருதுநகர் மாவட்ட செயலாக்க பிரிவு உதவி ஆணையர் (செயலாக்கம்), விருதுநகர் செயலாளராகவும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்  துறை சிவகாசி கோட்ட உதவி இயக்குநர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா தொழிற்சங்க பேரவையைத் சேர்ந்த முருகன், அனைத்திந்திய தொழிற்சங்க மையத்தை சேர்ந்த சமுத்திரம், இந்திய பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கண்ணண் ஆகியோர் தொழிலார்களின் பிரநிதிகளாக  நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிமருந்து தயாரிப்பாளர்கள் சங்கம் துணை தலைவரும் அயன் பட்டாசு தொழிற்சாலையைச் சேர்ந்த அபிரூபன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிமருந்து தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவரும் ரத்னா பட்டாசு  தொழிற்சாலையைச் சேர்ந்த விஜயகுமார், சோனி பட்டாசு தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் கணேசன் ஆகியோர் வேலையளிப்பவர்களின் தரப்பு பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவான பட்டாசு தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய வீதங்களை திருத்தியமைப்பதுதொடர்பாக, விசாரணைகள் நடத்துவதற்கும், மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும். இதனைத் தொடர்ந்து வரைவு ஊதியங்கள் வெளியிடப்பட்டு பொதுமக்கள் கருத்து கேட்கப்படும். இதனைத் தொடர்ந்து இறுதி ஊதியம் தொடர்பான அறிவிப்பு  வெளியிடப்படும்.



Tags : Committee , fireworks business, Reconcile , Labor Welfare ,Directive
× RELATED காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல்...