×

80 ஆயிரம் மதிப்புள்ள ‘செருப்பை கண்டுபிடித்து தாங்க’:தனியார் வங்கி மேலாளர் காவல் நிலையத்தில் புகார்

சென்னை: வீட்டில் இருந்து திருடுபோன 19 ஜோடி ஷூ மற்றும் செருப்புகளை கண்டுபிடித்து தரும்படி தனியார் வங்கி மேலாளர் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார்.சென்னை கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனி திவான் பகதூர் சண்முகம் சாலையை சேர்ந்தவர் அப்துல் ரபிக்(46). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி காலை 9.30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தான் வேலைக்கு சென்றதாகவும், அந்த நேரம் பார்த்து வீட்டின் வாசலில் ரேக்கில் வைத்திருந்த ₹80 ஆயிரம் மதிப்புள்ள 12 ஜோடி ஷூக்கள், 7 ேஜாடி செருப்புகளை அடையாளம்  தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாகவும், அவற்றை கண்டுபிடித்து தரும்படியும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து செருப்பை திருடி சென்ற மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.Tags : bank manager ,police station , 80 thousand,'Private, bank manager ,police station'
× RELATED மூன்றாவது முறையாக காவல் நிலையம் மூடல்