கனமழையால் போடிமெட்டு மலைச்சாலையில் திடீர் மண் சரிவு: 9 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

போடி: கனமழையால் போடிமெட்டு மலைச்சாலையில் இன்று அதிகாலை திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 9 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டம் போடி, போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு போடிமெட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மலைச்சாலையில் மழைநீர் ெபருக்கெடுத்து ஓடியது. இன்று அதிகாலை 1 மணியளவில் போடிமெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருவி அருகில் 11வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண் அப்பகுதியில் உள்ள சாலையை முழுவதும் மூடி மறைத்தது. இதனால் போடி-போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போடிமெட்டு, மூணாறு உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த அனைத்து வாகனங்களும் போடி முந்தல் சோதனைச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோன்று மூணாறு உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த அனைத்து வாகனங்களும் போடிமெட்டு சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன.  இன்று காலை 9.30 மணியளவில் மலைச்சாலையில் சரிந்து கிடந்த மண்ணை ஜேசிபி மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இதன்பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. மண்சரிவால் போடி-போடிமெட்டு மலைச்சாலையில் 9 மணி ரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>