×

இன்று கார்த்திகை பிறப்பு: களக்காடு, தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

களக்காடு: கார்த்திகை மண்டல பூஜை  விழாவை முன்னிட்டு களக்காடு ஆற்றங்கரை தெருவில் உள்ள ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை மாத முதல் தேதியான இன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து விரதம் துவங்கினர். கோயில் பட்டர் நாராயண சர்மா பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து 6 மணிக்கு விஸ்வரூபதரிசனம் இடம்பெற்றது. காலை 7.30 மணிக்கு உஸபூஜை நடத்தப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகளும், 9 மணிக்கு அத்தழபூஜையும் நடக்கிறது. 41ம் நாளான வரும் டிச 27ல் மண்டல பூஜை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை களந்தை சபரிமலை அய்யப்பன் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர். தென்காசி கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி குற்றாத்தில் இன்று அதிகாலை வேளையிலேயே ஐயப்ப பக்தர்கள் புனித நீராட திரண்டனர். ஆனால் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஐயப்ப பக்தர்கள் ஐந்தருவி, புலியருவிகளில் புனித நீராடினர். பின்னர் மெயினருவிக்கரையில் உள்ள கன்னி விநாயகர் கோயில்,  செண்பக விநாயகர் கோயில்,  குற்றாலநாதர் கோயிலில் உள்ள  அம்பல விநாயகர் மற்றும் உள் பிரகாரத்தில் சாஸ்தா சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள் அங்கு மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.

Tags : devotees ,Birth ,Kalakkad ,Thenkasi ,Iyappa ,Birthday ,Karthika , Karthi, Kalakkad, Tenkasi, Iyappa devotees
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி