தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற கோரி கடாட்சபுரத்தில் செடி நடும் போராட்டம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சிக்குள்பட்ட கடாட்சபுரம் புதுத்தெருவில் மேற்கு பக்கம் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டவுடன் அப்பகுதி உயர்த்தப்பட்டது. இதைபோல் மெயின் சாலையில் புதிய சாலை அமைக்கப்பட்டு அப்பகுதி உயர்ந்துவிட்டது. மேலும் தெற்குபுறம் தனியார் நில விற்பனைக்கு பிளாட் அமைக்கப்பட்டதால் அடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது மழை பெய்தாலும் புதுத்தெருவில் குளம் போல் தண்ணீர் தேங்க தொடங்கியது. தண்ணீர் நீண்ட நாள்கள் தேங்குவதால் அதில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஆனாலும் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கிராம மக்கள் கடாட்சபுரம் அதிமுக இளைஞரணி ஞானராஜ் தலைமையில் மாவட்ட பாஜ சிறுபான்மைபிரிவு துணைத் தலைவர் சந்திரபோஸ் முன்னிலையில் தேங்கிய நீரில் கீரைச்செடியை நட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இனிமேலும் தண்ணீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியல் நடத்திட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : plant ,removal ,Kadatsapuram ,planting plant , Rain water, Kadaksapuram, planting struggle
× RELATED வயநாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை: ராகுல்காந்தி கோரிக்கை