×

டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி

பூந்தமல்லி: அம்பத்தூர் அடுத்த புதூர் அன்பழகன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கேத்வின் (12), கேத்ரீன் (4) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கேத்ரீன் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் அதிகமானதால், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேத்ரீனை அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், சிறுமிக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்ைச அளித்து வந்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கேத்ரீன் நேற்று பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : 4-year-old girl dies , dengue fever
× RELATED மாநகரில் பரவும் டெங்கு காய்ச்சல்