கோவா டிஜிபி மாரடைப்பால் மரணம்

பனாஜி: கோவா மாநில டிஜிபி பிரணாப் நந்தா (57), நேற்று முன்தினம் கோவாவில் நடந்த காவல்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், பணி நிமித்தமாக டெல்லி சென்றார். அங்கு அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார். 1998ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த அவர், கடந்த பிப்ரவரியில் கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவரது மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்த இரங்கல் செய்தியில், டிஜிபி பிரணாப் நந்தா இறந்தது குறித்து கேள்விபட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.’ என்று கூறியுள்ளார். நந்தாவின் மனைவி சுந்தரி நந்தா, புதுச்சேரியின் முதல் பெண் டிஜிபி.யாக கடந்தாண்டு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>