×

பாபர் மசூதி இடிப்பு தினம் அயோத்தியில் பாதுகாப்பு

அயோத்தி: அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ல் டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இதன் 27வது இடிப்பு தினம் வரும் டிசம்பர் 6ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தவிர்க்க, அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அனுஜ் ஜா கூறுகையில், ``அயோத்தி நில வழக்கு தீர்ப்பு வெளியான போது இருந்ததை போன்று, பாபர் மசூதி இடிப்பு நினைவு தினத்தையொட்டியும் அயோத்தி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி மக்கள் அமைதியை விரும்புபவர்கள் என்பதால், அமைதி, சமாதானம், நல்லிணக்கத்தை கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறோம்,’’ என்றார். அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி, அனுமன் கர்கி, தசரத் மகால், ராம் கி பைடி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் புனித தலங்களில் 45 சிசிடிவி கேமராக்கள் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளன.


Tags : Babri Masjid ,Ayodhya , Babri Masjid demolition day, Ayodhya security
× RELATED அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம்