×

இந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு

சென்னை: இந்திய, இலங்கை  நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற  கராத்தே  சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடந்தது. இதன் பல்வேறு பிரிவுகளில் இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த மாநில அளவிலான   அணிகள் பங்கேற்றன. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற வீரர்கள் 8 தங்கம், 15 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை வென்றனர். மாநிலங்களுக்கான மொத்த பதக்கப் பட்டியலிலும் தமிழக அணியே முதலிடம் பிடித்தது.பதக்கங்களை வென்று தமிழகம் திரும்பிய பயிற்சியாளர் நாகமணி மற்றும் வீரர்களுக்கு சென்னையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கராத்தே வீரர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக அணிக்கு பாராட்டு

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான 32வது பெடரேஷன் கோப்பை வாலிபால்  போட்டியில், தமிழக அணி 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது. இதையொட்டி, தமிழ்நாடு கைப்பந்து விளையாட்டு சங்கம் சார்பில் தமிழக அணியில் இடம்பெற்ற வீரர்கள், பயிற்சி யாளர் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  இதில் சங்க நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

எஸ்ஆர்எம்ஐஎஸ்டி வெற்றி

தமிழக பல்கலைக்கழகங் களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி கன்னியாகுமரியில் நடந்தது. இறுதிப் போட்டியில்  இந்துஸ்தான் ஐஎஸ்டியை, சென்னை  எஸ்ஆர்எம்ஐஎஸ்டி  வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் சென்னை பல்கலைக்கழகம் 3வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 4வது இடத்தையும் பிடித்தன.

தண்டாலில் உலக சாதனை

சிவகாசி அருகே நடுவப்பட்டியை சேர்ந்த வி.காளிராஜ், தன் விரல்களை மட்டும் பயன்படுத்தி, ஒரு நிமிடத்தில் 67 தண்டால் (ஸ்பைடர்மேன் நுக்கெல் புஷ்-அப்) எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம்  பேசிய வி.காளிராஜ், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், அவர்கள் பல தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த சாதனையை நிகழ்த்தியதாக தெரிவித்தார்.




Tags : Tamil Nadu ,Veterans ,Veterans Indo-Lanka Karate: Tribute , Indo-Lanka Karate: Tribute to Tamil Nadu Veterans
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...