×

புதிய நீதிக்கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு அமைப்பு: ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

சென்னை: புதிய நீதிக்கட்சி சார்பில் கட்சியின் செயல்தலைவர் ஏ.ரவிக்குமார் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் பணிக்குழுவை கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:எஸ்.பழனி(அமைப்பு செயலாளர்), பி.யுவராஜ்(வழக்கறிஞர் அணி துணைத்தலைவர்)- பொறுப்பு மாவட்டங்கள்-சென்னை. எஸ்.ஜெ.பிரகாஷ்(அமைப்பு செயலாளர்)- பொறுப்பு மாவட்டங்கள்-காஞ்சிபுரம், செங்கல்பட்டு. எஸ்.ஏ.ராஜாராம்(இளைஞரணி  செயலாளர்), ஜி.பி.கே.பாலாஜி(வேலூர் மாவட்ட தலைவர்) பொறுப்பு மாவட்டங்கள்-வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை.

எஸ்.எல்.சுதர்சன்(ஏ.சி.எஸ் பேரவை தலைவர்), கதிரேசன் (விழுப்புரம் மண்டல செயலாளர்) பொறுப்பு மாவட்டங்கள்- கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம். ஆர்.ரவி(அமைப்பு செயலாளர்), எம்.பி.தங்கதுரை(அமைப்பு செயலாளர்), பாலுபிள்ளை(திருச்சி  மாவட்ட செயலாளர்) பொறுப்பு மாவட்டங்கள் - திருவள்ளூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை.  எஸ்.செளந்தரராஜன்(அமைப்பு செயலாளர்), சூலூர் அசோக்(துணை பொதுச்செயலாளர்) பொறுப்பு மாவட்டம்-ஈரோடு. ஏ.ராஜவேல்(அமைப்பு செயலாளர்), கண்ணன்(அமைப்பு செயலாளர்), பொன்னுசாமி(மண்டல செயலாளர்), இளங்கோ(மண்டல  செயலாளர்) பொறுப்பு மாவட்டங்கள்- சேலம், சேலம் மாநகர், நாமக்கல். எம்.ரஜினி தர்மராஜ்(இணைபொதுச்செயலாளர்), ஆதித்யா ராஜேந்திரன்(செங்குந்தர் பேரவை தலைவர்) பொறுப்பு மாவட்டங்கள்- கோவை, திருப்பூர்.

பி.ராமமூர்த்தி(மதுரை மாவட்ட செயலாளர்), ரவிச்சந்திரன்(தேனி மாவட்ட பொறுப்பாளர்), ராஜா முத்தையா(திண்டுக்கல் பொறுப்பாளர்) பொறுப்பு மாவட்டங்கள்- மதுரை, தேனி, திண்டுக்கல். என்.லோகநாதன்(திரு.விக தொழிற்சங்க செயலாளர்),  எம்.ஜெகன்(மாவட்ட செயலாளர்), புதிய விநாயகம்(விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்) பொறுப்பு மாவட்டங்கள்- ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, சிவகங்கை. அனைத்து மாவட்ட செயலாளர்களும் உள்ளாட்சி தேர்தல் பணிக்குழுவினரை தொடர்பு கொண்டு தாங்கள் போட்டியிட விரும்பும் பொறுப்புகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.Tags : New Justice Party ,Election Working Committee ,AC Shanmugam Announces ,AC Shanmugam Announces New Justice Party , Local Election Working Committee on behalf of New Justice Party: AC Shanmugam Announces
× RELATED கொளத்தூர் தேர்தல் பணிக்குழு...