×

கர்நாடகாவுக்கு அமமுக புதிய செயலாளர் : டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுகவில் இருந்து புகழேந்தி விலகியதையடுத்து கர்நாடக மாநில செயலாளராக எம்.பி.சம்பத்தை டிடிவி.தினகரன் நியமனம் செய்துள்ளார். டிடிவி.தினகரன் மேல் இருந்த அதிருப்தி காரணமாக சசிகலாவிற்கு மிகவும் நெருங்கியவரான புகழேந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இந்தநிலையில், அமமுகவில் இருந்து விலகுவதாக புகழேந்தி அறிவித்தார். வரும் 18ம் தேதிக்கு பிறகு தன்னுடைய ஆதரவாளர்களுடன் மீண்டும் அவர் அதிமுகவில் இணைய உள்ளார். இதனால் அவர் வகித்து வந்த கர்நாடக மாநில செயலாளர் பதவி காலியாக இருந்தது. எனவே, அப்பதவிக்கு புதிதாக பொதுக்குழு உறுப்பினர் எம்.பி சம்பத் (சிமோகா சட்டமன்ற தொகுதி, கர்நாடகா) நியமிக்கப்படுவதாக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்ட டிடிவி.தினகரன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எம்.பி.சம்பத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Karnataka , New Secretary , Karnataka
× RELATED கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் செயலர் திடீர் தற்கொலை முயற்சி