×

ராமானுஜம் ஓய்வு பெற்றதையடுத்து ஆர்டிஐ ஆணைய தலைவராக டி.கே.ராஜேந்திரனுக்கு வாய்ப்பு

சென்னை: முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஆர்டிஐ ஆணையத்தின் தலைவராக டி.கே.ராஜேந்திரனை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய, மாநில அரசுகள், அரசு அதிகாரிகள் குறித்த தகவல்களை கேட்டுப் பெறுவதற்கான உரிமையை மத்திய அரசு புதிய சட்டத்தின் மூலம் அமல்படுத்தியது. அதை தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலத்திலும், தகவல் பெறும் உரிமை சட்ட ஆணையம் (ஆர்டிஐ) அமைக்கப்பட்டது. இதன் தலைவராக நியமிக்கப்படுகிறவர் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கலாம். கடைசியாக, ஆர்டிஐ அமைப்பின் தலைவராக முன்னாள் டிஜிபி ராமானுஜம் இருந்தார். ஆர்டிஐ கமிஷனர்களாக தட்சிணாமூர்த்தி, முருகன், செல்வராஜ், தமிழ்குமார், பிரதாப்குமார், முத்துராஜ் ஆகியோர் உள்ளனர். ராமானுஜத்துக்கு பின்னர் கவர்னரின் முன்னாள் செயலாளர் ஷீலா பிரியா தலைவராக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த மே 5ம் தேதி ஓய்வு பெற்றார்.

அவரது பதவிக்காலம் முடிந்து விட்டதால், புதிய தலைவரை நியமிக்கும் பணியில் தமிழக அரசு இறங்கியது. இந்த பதவியைப் பிடிக்க பலரும் போட்டி போட்டனர். கடைசியில், முன்னாள் டிஜிபியும் குட்கா விவகாரத்தில் சிபிஐ வலையில் சிக்கியுள்ள டி.கே.ராஜேந்திரனை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, இதற்கான ஆட்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாகின. இதனால் இந்த பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவியது. அதில் கடைசியாக டி.கே.ராஜேந்திரனை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : DK Rajendran ,retirement ,RTI Commission ,Ramanujam , DK Rajendran, head RTI Commission after Ramanujam's retirement
× RELATED அமமுகவினர் ஆர்ப்பாட்டம்