ஸ்மார்ட் கல்வி முறை சிறப்பாக செயல்படுத்திய மாநகராட்சிக்கு விருது

சென்னை: சிறப்பான ஸ்மார்ட் கல்வி முறையை  செயல்படுத்தியமைக்கு சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட விருதினை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கோவிந்த ராவ் பெற்றுக்கொண்டார். இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் 119 சென்னை தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 சென்னைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 281 சென்னைப் பள்ளிகளில் மழலையர் குழந்தைகளுக்காக 200 மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இதில் மொத்தம் 83,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  

அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 1.75 கோடி மதிப்பீட்டில் மின்னணு வகுப்பறைகளை கொண்ட 28 பள்ளிகள் கட்டமைக்கப்பட்டு, மின்னணு வகுப்பறைகளுக்கு தேவையான மின்னணு உபகரணங்களுடன் வள  வகுப்பறைகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சராசரியாக வகுப்பு வருகை, பங்கேற்பு மற்றும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.  

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை சீர்மிகு நகர நிறுவனத்திற்கு கடந்த 15ம் தேதி டெல்லியில் நடைபெற்ற குளோபல் ஸ்மார்ட் சிட்டிஸ் போரம் 2019 நிகழ்ச்சியில், 28 சென்னைப் பள்ளிகளில் வளவகுப்பறைகள் அமைத்து சிறப்பான ஸ்மார்ட் கல்வி முறையை செயல்படுத்தியமைக்காக வழங்கப்பட்ட விருதினை, நாகாலாந்து அரசின் உயர்தொழில்நுட்பக் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் டெம்ஜென் இம்னா அலாங் வழங்க, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) சென்னை சீர்மிகு நகர மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் பெற்றுக் கொண்டார்.

Tags : corporation , Award for corporation ,implemented smart education system
× RELATED தேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்