பொதுத்தேர்தல் நடைமுறையை உள்ளாட்சி தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் : திமுக வழக்கறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: பொதுத் தேர்தலில் பின்பற்றப்படும் சட்ட நடைமுறையை உள்ளாட்சித் தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்று திமுக வழக்கறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர, அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட மாநகர அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் வரவேற்றார். தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, சட்டதிட்ட திருத்தக்குழுச் செயலாளர் பி.வில்சன், எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கலைஞருக்கு, திருவாரூர் காட்டூரில், “அருங்காட்சியகம்” அமைக்கப்படும் என்ற அறிவித்து, திமுக தொண்டர்களின் நெஞ்சமெல்லாம் குடியிருந்து வரும் கலைஞருக்கு சிறப்பு செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
திமுக சார்பில் அளிக்கப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும். அதாவது இந்திய தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தல் நடத்துவதில் பின்பற்றுகின்ற அனைத்து சட்ட நடைமுறைகளையும், உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும். உள்ளாட்சிகளுக்கான வார்டு மறுவரையறை விதிகள் 2017ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேறின.

Tags : election ,elections ,DMK , general election process , followed , local elections
× RELATED மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களை...