×

திசையன்விளையில் மரண பள்ளத்தால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

திசையன்விளை: திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான நேருஜி கலையரங்கம் முன்பு உள்ள மரண பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. அசம்பாவிதம் நிகழும் முன் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திசையன்விளை மைய பகுதியில் அமைந்துள்ளது பேரூந்து நிலையம். அதன் அருகிலேயே தினசரி சந்தை மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் நேருஜி கலையரங்கம் உள்ளது. அத்துடன் ஓ.எஸ் சந்து வழியாக மெயின்பஜார் செல்லும் முக்கிய பாதையாகவும் இப்பகுதி அமைந்துள்ளது.

இரவு நேரங்களில் அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்படும் இரவு உணவகங்களுக்கு பொதுமக்கள் அதிகம் வருவர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழும் முன் இப்பள்ளத்ைத மூட பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : accident ,Death ,Ditch , Vegetarian, fatal groove, accident risk
× RELATED கரூர் பகுதிகளில் சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் விபத்து அபாயம்