×

அஞ்சுகிராமம் காவல் நிலையம் முன் ஆபத்தான தென்னை மரம் அகற்றப்படுமா?... சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் காவல் நிலைய வளாகத்தின் முன்பகுதியில் பல வருடமாக அகற்றப்படாத பட்டுப்போன தென்னை மரம் உள்ளது. இந்த தென்னை மரம் உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு மிக அருகில் நிற்கிறது. இந்த பகுதியில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த தென்னை மரத்தை  அகற்ற வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும்  அதை கண்டும் காணாமல்  காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த மரம்  விழுந்தால்  மிகப்பெரிய விபத்தும், உயிர் சேதங்களும் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக காலை சுமார் 11 மணி அளவில் திடீரென பட்டுப்போன தென்னை மரத்தின் ஒரு பகுதி மின் வயர்கள் மீது விழுந்து சாலையில் விழுந்தது. அப்போது மின் ஒயர்களிலிருந்து தீப்பொறி பறந்தது. அப்போது  அந்தப்பகுதியில் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கு பின்னரும் அந்த மரத்தை அகற்ற வேண்டி காவல் நிலைய அதிகாரிகளிடம் கூறியதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் உடனடியாக பட்டுப்போன தென்னை மரத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : police station ,Anjugram ,Community activists ,Anguillaram , Anjugrammam, coconut tree
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து