×

உணவு மற்றும் இதர பொருட்களுக்கு தனி நபர் செலவு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிராமப்புறங்களில் 8.8% சரிவு : ஆய்வில் தகவல்

டெல்லி : உணவு போன்ற அத்தியாவசிய செலவுகளை மக்கள் குறைத்துவிட்டது தொடர்பான ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்தது அம்பலம் ஆகியுள்ளது. 2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கான நுகர்வோர் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்று சமூக வலைத்தளத்தில் கசிந்தது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வு 2017ல் நடத்தப்பட்டது. தேசிய புள்ளியில் துறை அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் உணவு மற்றும் உணவு அல்லாத இதர பொருட்களுக்கு தனி நபர் செலவு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

அதன்படி உணவு மற்றும் இதர செலவுகள் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிராமப்புறங்களில் 8.8% சரிந்தது தெரியவந்துள்ளது. அதே வேளையில் கடந்த 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 2.2% அதிகரித்தது தெரிய வந்தது. ஆனால் இந்த புள்ளி விவரத்தில் குளறுபடிகள் இருப்பதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தது. எனவே 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் புதிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர்கள் தனிநபர் மற்றும் குடும்ப செலவுகள் குறைந்ததற்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியே காரணம் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.


Tags : areas , Food, Essential Cost, Consumer, Federal Government, Urban, Rural
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை