×

காட்பாடி கோயிலில் 150 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு

வேலூர்: காட்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சுமார் ரூ20 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலையை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. வேலூர் மாவட்டம் காட்பாடி வி.டி.கே. நகரில் மாரியம்மன் கோயில் உள்ளது. காட்பாடி ரயில்வே கேட் அருகில் உள்ள இக்கோயிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மர்ம ஆசாமிகள் புகுந்துள்ளனர். அங்கிருந்த சுமார் 30 ஆண்டு பழமை வாய்ந்த 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கருவறையில் மூலவருக்கு பக்கத்தில் இருந்த ஐம்ெபான் சிலை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து ஐம்பொன் சிலையை திருடிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
கொள்ளைப்போன ஐம்பொன் சிலையின் தற்போதைய மதிப்பு ரூ20 லட்சமாகும்.

Tags : Imbon Amman ,Katpadi temple ,statue , Katpadi, Imbon Amman Statue, Theft
× RELATED பழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில்...