×

சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடப்பதையொட்டி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. நேற்று (15ம் தேதி) முதல் வருகிற ஜனவரி 20ம் தேதி வரையில், சென்னையிலிருந்து 55 பேருந்துகள், திருச்சியிலிருந்து 2, மதுரையிலிருந்து 2, புதுச்சேரியிலிருந்து 2, தென்காசியிலிருந்து 3 என மொத்தம் 64 அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப, ஒவ்வொரு நாளும் பேருந்துகள் இயக்கப்படும்.

www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.goibgo.com ஆகிய வலைத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 94450 14412, 94450 14450, 94450 14424, 94450 14463, 94450 14416 ஆகிய கைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Tags : Sabarimala ,Chennai ,Trichy ,Madurai , Chennai, Trichy, Madurai, Sabarimalai, special buses
× RELATED கவுன்சிலர் பதவியை ராஜினாமாசெய்தார் அமமுக வேட்பாளர்..!!