×

தென்தாமரைகுளம் அருகே 100 நாட்களாக வேலையின்றி தவிக்கும் உப்பள தொழிலாளர்கள்

தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம் அருகே காமராஜபுரம், சோட்டப்பணிக்கன்தேரிவிளை, ஆண்டிவிளை, சித்தன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் அமைந்துள்ளன.  இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். கடந்த பருவ மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உப்பளங்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில் உப்பள பாத்திகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை  மோட்டார் மூலம் ஓரிரு தொழிலாளர்கள் மட்டுமே அகற்றி வருகின்றனர். இருப்பினும் பாத்திகளுக்குள் புகுந்த வெள்ளம் இதுவுரை வற்றவில்லை. ராமநாதபுரம், வேதாரண்யம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என நான்கு மாவட்டத்திலும் இருந்து வேலை பார்த்து வந்த இத்தொழிலாளர்கள் கடந்த 100 நாட்களாக வேலையின்றி தங்கள் ஊர்களில் முடங்கியுள்ளனர்.

கடுமையான வெயிலில் வேலை செய்யும் இத்தொழிலாளர்களுக்கு ஊதியம் மிக குறைவே. அதோடு தற்ேபாது வேலையும் இல்லாததால் அவர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உப்பளங்களில் தேங்கி நிற்கும் வெள்ளத்தை முழுவதுமாக உடனே வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர். தண்ணீர் வடிந்தால் தான் உப்பள தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிைடக்கும் என்பதால் இத்தொழிலாளர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். வருவாய் இன்றி வாடும் உப்பள தொழிலாளர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உப்பளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thenmaramakulam ,Salt , Thenmaramakulam, work and salt workers
× RELATED வெங்காய ஃப்ரைட் ரைஸ் ரெசிபி