×

கன்னியாகுமரியில் வியாபாரிகள் ஏமாற்றம்: சீசன் கடைகள் ஏலம் திடீர் ஒத்திவைப்பு.. மீண்டும் 18ம் தேதி நடக்கிறது

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சபரிமலை  சீசன் நாளை மறுநாள் தொடங்குகிறது. சீசன் கடைகளுக்கான ஏலம்  பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி காலை தொடங்கியது. முதலில் கார் பார்க்கிங் ஏலம் நடந்தது. தொடர்ந்து கடற்கரை சாலையில் 250 கடைகள், சன்னதி  தெருவில் 23 கடைகள் உட்பட மொத்தம் 273 கடைகளுக்கு ஏலம் தொடங்கியது. இதில் 4  கடைகள் மட்டுமே ஏலம் போயின. இவை மொத்தம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து  206க்கு ஏலம் போனது. கோர்ட் உத்தரவுபடி கடற்கரை சாலையில் 250  கடைகள் மட்டுமே ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பேரூராட்சி  நிர்ணயித்த தொகை அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்கவில்லை.  இதனால் கடைகளின் ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த  நிலையில் 2வது முறையாக 11ம் தேதி ஏலம் தொடங்கியது. அப்போது மிக குறைவான கடைகளே ஏலம் போயின. இந்த நிலையில் 3வது முறையாக இன்று (15ம் ேததி) ஏலம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏலம் நடத்தும் குழுவில் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் சரவணகுமாரை கூடுதலாக நியமித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் தற்காலிக கடைகள் அமைக்கப்படும் பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது கன்னியாகுமரி கடற்கரை சாலை முதல் சன்சென்ட் பாயின்ட் வரை உள்ள பகுதியில் நடைபாதையை ஆக்ரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஆக்ரமிப்பு கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் அகற்றப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் இன்று 3வது முறையாக ஏலம் நடப்பதாக இருந்தது. இதனால் காலை முதலே ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். வழக்கத்துக்கு மாறாக இன்று சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் ஏலத்துக்காக வந்திருந்தனர். மேலும் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்திருந்தனர். ஆனால் திடீரென்று ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரமற்ற வகையில் உணவு பொருள் விற்பனை
கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் சுகாதாரமற்ற, தரமற்ற வகையில் உணவுகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாங்காய், அன்னாசிப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வெட்டி திறந்த வெளியில் விற்பனை செய்கின்றனர். கன்னியாகுமரியில் அதிக காற்று வீசும். அவ்வப்போது மணலையும் வாரி இறைக்கும். இது உணவுகளில் தெறிக்கும் வாய்ப்பு உள்ளது. அதுபோல ஈக்கள் மொய்த்தும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரி ஓட்டல்கள், உணவு விடுதிகள், சாலையோர, தள்ளுவண்டி கடைகளை ஆய்வு செய்து உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Merchants ,Kanyakumari ,season auction ,Season stores auction , Postponement of virgins, merchants and auctions
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...