இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதிக்கு முன்னேற்றம்

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதி போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் தோல்வியை தழுவினார். ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் கடந்த 7 மாதங்களில் பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் கால் இறுதி போட்டிக்கு முன்னேறவில்லை. தற்போது அவர் ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் அவர் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அவர் மற்றொரு இந்திய வீரர் சவ்ரப் வெர்மாவை எதிர்த்து விளையாடினார். இதில் 21-11, 15-21, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு முன்னேறினார். அதேபோல் மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், இந்தோனேசிய வீரர் ஜோனாடன் கிறிஸ்டியுடன் மோதினார். இதில் 12-21, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவினார்.

Related Stories:

>