×

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 144 கோடிக்கு ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

* 7 படுக்கையறை, நீச்சல் குளம், தியேட்டர் உள்ளிட்ட வசதிகளை கொண்டது

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 144 கோடிக்கு மிக பிரமாண்டமான மற்றும் ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். 37 வயதான பிரியங்கா சோப்ரா தன்னைவிட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ஜோத்பூரில் நடந்தது. திருமணத்துக்கு பிறகு பிரியங்கா தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து செல்கிறார்.

இந்த நிலையில், இந்த தம்பதியர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் பிரமாண்டமான வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். 20 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 144 கோடி) விலை கொடுத்து இந்த வீடு வாங்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுரஅடி பரப்பளவை கொண்ட இந்த ஆடம்பர வீட்டில் 7 படுக்கையறைகள், 11 குளியலறைகள், நீச்சல் குளம், பொழுதுபோக்கிற்கான பவுலிங் அரங்கம், சினிமா தியேட்டர், ரெஸ்டாரண்ட் மற்றும் பார், கூடைப்பந்து விளையாடுவதற்கான உள்ளரங்கம், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
நிக் ஜோனாஸ் திருமணத்தின் போது 6.5 மில்லியன் டாலர் விலையில் ஒரு வீடு வாங்கியிருந்தார். அந்த வீட்டை அவர் இப்போது 6.9 மில்லியன் டாலருக்கு விற்று விட்டார்.

Tags : USA ,house ,Priyanka Chopra ,Los Angeles , Priyanka Chopra , 144 crore ,luxury house,Los Angeles, USA
× RELATED வீட்டை உடைத்து கொள்ளை