×

அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட இன்ஸ்பெக்டர்

சென்னை: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் சேர்மக்கனி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அதில், கடந்த 2013 மே மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது, என் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 250 சவரன் தங்கநகை, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்துச்  சென்று விட்டனர். ஆனால், 60 சவரன் தங்க நகைகளையும், ரூ.23 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளை அடித்ததாக தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், புதுச்சேரியில் பதுங்கியிருந்த 3 பேரை கைது செய்து விசாரிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால், போலீசார் இதை மறுத்தனர். இதையடுத்து கொள்ளை வழக்கை விரைவாக விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். ஐகோர்ட்டும் உத்தரவிட்டது. வழக்கை விசாரிக்காத இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மீது அவமதிப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இன்ஸ்பெக்டர் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் இதுகுறித்து இன்ஸ்பெக்டருக்கு குற்றவியல் வக்கீல் பிரபாவதி தகவல் தெரிவித்தார். தற்போது மதுரவாயல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணி செய்யும் ரவீந்திரன் அடுத்த அரைமணி நேரத்தில் நேரில் ஆஜராகி, மன்னிப்பு கோரினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags : Inspector ,High Court , Inspector apologizes , High Court
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது