×

கொலையை தடுக்க நாங்க என்ன கடவுளா? ஆவேசப்பட்ட கலெக்டர் அதிரடியாக நீக்கிய அரசு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ மாவட்டத்தை சேர்ந்தவர் சோனு சிங். இவர் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவரது தந்தை சிவனாயக் சிங், அப்பகுதியில் பாஜ மூத்த நிர்வாகி. கடந்த செவ்வாய்  இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்  இதைத் தொடர்ந்து, நிலைமையை நேரில் அறிவதற்காக பிரேத பரிசோதனை கூடத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் சர்மா சென்றார். அப்போது, அவரிடம் கொலை நடந்தது குறித்து சோனு குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர்.

இதனால் பொறுமை இழந்த கலெக்டர் சர்மா, ‘கொலையே நடக்காத நாடு எதுவும் இந்த உலகத்தில் எங்கும் இல்லை. குற்ற சம்பவங்கள் நடக்காமல் முன்கூட்டியே தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஒன்றும் கடவுள் கிடையாது. எங்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? கொலை நடக்காமல் தடுத்து இருப்பீர்களா?’ என்று மிகவும் உரத்த குரலில் கூறினார். கலெக்டரின் இந்த செயலுக்கு. அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டர் சர்மா பேசிய வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால், கலெக்டர் பதவியில் இருந்து சர்மாவை உபி அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.

Tags : murder ,government ,collector ,killing , we to do to prevent murder,government ,desperate collector stunned
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...