×

ஏவுகணை தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு போர்க்கப்பல் தயாரிக்க கோவா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பனாஜி: ‘‘ஏவுகணை தொழில்நுட்பத்துடன் கூடிய 2 போர்க் கப்பல் தயாரிக்க, கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துடன் (ஜிஎஸ்எல்) மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது’’ என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் நேற்று தெரிவித்தார். கடலோர காவல்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட ரோந்துக் கப்பல் தொடக்க விழா நிகழ்ச்சி கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பத் நாயக் கலந்து கொண்டு பேசியதாவது:

கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், கடற்படை பயன்பாட்டுக்காக, ஏவுகணை தொழில்நுட்பத்துடன் கூடிய 2 போர்க் கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இது அரசு நிறுவனமான ஜிஎஸ்எல் வரலாற்றில் மிகப்பெரிய ஆர்டர்.
இத்திட்டத்தை ஜிஎஸ்எல் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் குறித்த நேரத்தில் முடிப்பார்கள் என நம்புகிறேன். இத்திட்டம் ஜிஎஸ்எல் நிறுவனத்துக்கு இன்னும் பல வாய்ப்புக்களை உருவாக்கும். ராணுவ தயாரிப்பு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக ஆசியான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிடம் ஜிஎஸ்எல் பேசிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. ராணுவக் கண்காட்சி அடுத்தாண்டு லக்னோவில் நடைபெறவுள்ளது என்றார்.

Tags : Goa , Goa to build ,two warships,missile technology
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...