×

நெல்லை அருகே விஷமிகள் கல்வீசினார்களா?...அரசு பஸ் கண்ணாடி திடீரென்று உடைந்தது

நெல்லை: நெல்லை அருகே அரசு பஸ் கண்ணாடி திடீரென்று உடைந்ததால் பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அது தானாக உடைந்ததா அல்லது விஷமிகள் கல்வீசினார்களா? என விசாரணை நடக்கிறது.
நெல்லை மானூர் அருகே நல்லம்மாள்புரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இங்கு சுற்றுப்பட்டியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் வசதிக்காக நெல்லை டவுனில் இருந்து பள்ளமடைக்கு அரசு பஸ் விடப்பட்டுள்ளது.. இந்த பஸ் காலை, மாலை வந்து செல்லும். இதுபோல் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் அரசு பஸ் நெல்லையிலிருந்து புறப்பட்டு நல்லம்மாள்புரம் வந்தது. அப்போது மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏறிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென்று பஸ்சின் பின்பக்க கண்ணாடி டமார் என்று நொறுங்கி விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் இறங்கி வந்து பார்த்தனர். கண்ணாடி எப்படி உடைந்தது என அவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்ய நினைத்தனர். ஆனால் பஸ்சில் பயணிகள் இருந்ததால் அவர்களை பள்ளமடையில் இறக்கி விட்டபின் நேராக மானூர் போலீஸ் நிலையம் சென்து புகார் அளித்தனர்.
பஸ்சின் கண்ணாடி தானாக உடைந்ததா அல்லது விஷமிகள் யாராவது கல்வீசி தாக்கினார்களா? என விசாரணைநடத்தி வருகிறார்கள். மேலும் பள்ளிக்கு சென்று அங்கும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : paddy field , Paddy, Poisons, Government Bus
× RELATED தென்காசி - நெல்லைக்கு அரசு ஊழியர்கள்...